வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

Different medical pills and bottles, healthcare and shopping, pharmacy, drug store. Vector illustration in flat style

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல வகையான
மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கத்தின் செயலாளர்
மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாகவும்
இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் தீர்வு வழங்காவிட்டால் உலக சுகாதார ஸ்தாபனத்தில்
முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்