வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான விண்ணப்பம் செய்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் பிரகாரம், வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 35 என இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய, விண்ணப்பதாரர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உயர் டிப்ளோமா அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட டிப்ளோமா பயிற்சி நெறிகளை நிறைவு செய்தவராக காணப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பட்டதாரி பயிற்சி நெறிகளை நிறைவு செய்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விண்ணப்பதாரி, தமது பிரதேச செயலகத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

மேலும், 2020 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு, பட்டம் பெற்று தொழில் இல்லாத நிலையில், ஒரு வருடத்தை கடந்தவராக இருப்பதை, கிராம சேவகர் பிரிவு மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்