
வேரவில் மக்களது முறைப்பாட்டினை தொடர்ந்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திலிப் லியனகே நேரடியாக வேரவில் வைத்தியசாலைக்கு நேரடியாக வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கையினை மேற்கொண்டதாக
வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவசர நோய் நிலைமைகளில் வேரவில் வைத்தியசாலையிலிருந்து பிற வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
எனவே இது தொடர்பில் புதிய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு பொது மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து புதன் கிழமை (7) நேரடியாக வேரவில் வைத்தியசாலைக்கு முன்னறிவித்தல் இன்றி சென்ற
மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுடன் நிலைமைகளை ஆராய்ந்தார். இவருடன் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் இணைந்து சென்றிருந்தார்.
இறுதியில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திலிப் லியனகே வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக லான்ட்குறுசர் வாகனம் ஒன்று பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் உடனடியாகவே வேரவில் வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. மேலும், பழுதடைந்த லான்குரூசர் வாகனத்தினை விரைந்து பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அடுத்து நடைபெறும் தாதியர் நியமனத்திற்கு முன்னதாக வேரவில் வைத்தியசாலையைத் தரம் உயர்த்தி இங்கும் தாதியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
அதுவரையில் தற்காலிக ஏற்பாடாக பிற வைத்தியசாலைகளில் இருந்து சுற்றொழுங்கு முறையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் வேரவிலில் வைத்தியசாலைக்கு சென்று சேவையாற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலையினர்
தெரிவித்துள்ளனர்.
மாகாண சுகாதாரப் பணிப்பாளர் முழங்காவில் ஆதார வைத்தியசாலை, பூனகரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பூனகரி வைத்தியசாலை ஆகியவற்றிற்கும் நேரடியாகச் சென்று கள நிலமைகளை ஆராய்ந்தார் எனத் தெரியவருகிறது.