
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த வேனின் டயர் வெடித்ததனால் பாதையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதால் வேனுக்கு பாரிய சேதம் எற்பட்டுள்ளதுடன், மின்கம்பத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று (11) மாலை இடம் பெற்ற இவ்விபத்தின்போது வேனிலிருந்து எயார்பேக் சரியாக இயங்கியாதால் சாரதி உயிர் ஆபத்தின்றி தப்பினார்.எயா பேக் இல்லாதிருந்திருந்தால் ஸ்டேரிங்கில் நெஞ்சுப்பகுதி மோதுண்டு சாரதி உயிரிழந்திருப்பார்.
மேலும், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.