வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதிய வாகனம்: ஒருவர் வைத்தியசாலையில்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தோப்பூர் சந்தியில் டிப்பர் வாகனமொன்று மின் கம்பமொன்றில் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு காயங்களுக்கு இலக்கான நபர் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை மீறி பயணித்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முகநூலில் நாம்