“வெள்ளத்தையில் ஆரம்பமாகும் சேவை! 20 நிமிடத்தில் பயணம்! 60 ரூபா கட்டணம்”

கொழும்பில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த படகு சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வெள்ளவத்தை முதல் பத்தரமுல்ல வரையில் இந்த படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு கடற்படை ஆதரவு வழங்கவுள்ளது.

படகு சேவை எதிர்வரும் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை நோக்கி பயணிப்பதற்கு 30 நிமிடங்கள் மாத்திரமே செலவிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

ஒவ்வொரு அரை மணித்தியாலத்திற்கும் ஒரு முறை இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த படகு சேவை செயற்பாட்டில் இருக்கும்.

படகு சேவைக்காக 4 படகுகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. தியத உயனவில் ஆரம்பிக்கும் இந்த பயணம் நாவல மற்று கிருலப்பனை பகுதிகள் ஊடாக வெள்ளவத்தை சவோய் சினிமா அரங்கு வரை பயணிக்கும்.

இந்த சேவைக்காக 60 ரூபாய் கட்டணம் அறவிடப்படவுள்ளது. படகு சேவையின் மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

முகநூலில் நாம்