வெள்ளத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடுகள்

நாவலப்பிட்டி கெட்டபுலா ஓயாவில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் காணாமல்போயிருந்தனர்.

கெட்டபுலா தோட்ட புதுக்காடு அக்கரவத்தை ஆகிய பிரிவுகளில் வசித்துவந்த 36 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான அம்மாவாசி சந்திரமோகன், 49 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சத்தியசீலன் சுரேஸ் குமார் மற்றும் 3 பிள்ளைகளின் தாயாக ஜெயராம் ஜெயலட்சுமி ஆகியோரே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

கெட்டப்புலா தோட்டமானது காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கி வருகின்றது.

நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ள மேற்குறிப்பிட்ட மூன்று தொழிலாளர் குடும்பங்களுக்கும் காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் சார்பில் இழப்பீடுகள் வழங்கப்பட்டதுடன் காணாமல்போன நபர்களினது பிள்ளைகளின் முழுமையான கல்விச்செலவினையும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்போது காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் நிர்வாக இயக்குனர் சமிந்த குணரட்ன, கெட்டபுலா தோட்ட பொறுப்பதிகாரி சமிந்த சில்வா, இம்புள்பிட்டிய தோட்ட அதிகாரி கசுன் காரியசம் ஆகியோர் காணாமல் போனவர்களது உறவினர்களிடம் இழப்பீடுகளை வழங்கி வைத்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்