வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்டு வெள்ளத்தினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார்  பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டுக்கான காசோலையினை வழங்கி வைத்துள்ளார்.
இதில் முதற்கட்டமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 19 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கான .இழப்பீடுகளும்  வரும் நாட்களில் தொடர்ச்சியாக வழங்கப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், பிரதேச செயலக உதவித்திட்டப்பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் த.சர்மிளா மற்றும் உத்தியோகததர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முகநூலில் நாம்