வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த நிலை

சைப்ரஸ் நாட்டில் தொழில் சந்தர்ப்பம் வழங்குவதாக தெரிவித்து பணம் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவரிடம் 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த நபரை தெனியாய பொலிஸார் கைது செய்துள்ளனர். பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்த நபர் தெனியாய பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூலில் நாம்