
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு தபால் பொருட்களை ஏற்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக, பல நாடுகளுக்கான தபால் பொருட்களை ஏற்கும் பணி அண்மையில் இடைநிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போது மீண்டும் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான தபால் பொருட்களை ஏற்றுக்கொள்ளும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.