
நாளாந்தம் சுமார் 850 பேர் தமது பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் 290,000 அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக
வெளியேறியுள்ளதாக அதன் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு திணைக்களத்தின்
பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.