வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்காக வரும் புதிய நடைமுறை!!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு அடிப்படை பணத்தினை வங்கிகளில் பேண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செயற்றிட்ட நடவடிக்கைக்காக 50 மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் காலங்களில் வெளிநாடு செல்ல தயாராகும் இலங்கையர்களை இலக்கு வைத்து அவர்களுக்காக தனித்தனி கணக்குகளை திறந்து அந்த கணக்குகளுக்கு அடிப்படை பணம் ஒன்றை வைப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பக்காக செல்பவர்களுக்கு திறக்கப்படும் இந்த கணக்குகளுக்கு அரசாங்கம் 5 அமெரிக்க டொலர்களை வைப்பு செய்யவுள்ளது.

குறித்த கணக்குகளை திறக்கும் வர்த்தக வங்கிகள் மேலும் 5 அமெரிக்க டொலர்கள் வைப்பிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்திற்கு பல வர்த்தக வங்கிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார பணியம் தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்