வெளிநாடுகளில் தொழிலுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு தடை

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக வெளிநாட்டு தொழிலுக்கு செல்வதனை தற்காலிகமாக பிற்போடுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையர்கள் அதிகமாக தொழிலுக்காக செல்லும் மத்திய கிழக்கு உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் தொடர்பில் அவசியமான நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் சேவை செய்யும் நாடுகளின் தூதரகங்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையிலும் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

முகநூலில் நாம்