
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 342 இலங்கையர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடு திரும்பினர். இவர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களை வந்தடைந்தனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 34 பேரும் கட்டாரிலிருந்து 22 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதே வேளை ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 286 பேர் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இன்று நாடு திரும்பிய அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்பி வைக்கப்பட்டுள்ளனர்.