வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி மூன்று மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேலும் 481 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து 44 பேரும் கட்டாரின் தோஹாவிலிருந்து 147 பேரும் பஹ்ரைனிலிருந்து 290 இலங்கையர்களும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் விமான நிலையத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காகவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்