வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு விசேட திட்டம்…!

கொவிட் 19 நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் நிர்க்கதியாகவுள்ள அல்லது பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக புதிய முறைமையொன்று தயாரிக்கப்படவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது புதிய நிகழ்ச்சித்திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் ஜுன் மாத விமானப் பயணம் அதற்கு ஏற்ப திட்டமிடப்படும்.

அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து வருகை தந்த 197 பேரில் 22 பேர் நோய்த்தொற்றுடையவர்கள் என உறுதிசெய்யப்பட்டது.

குவைத்திலிருந்து வந்த 462 பேரில் 150 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 96 பேர் கொரோனா நோயாளிகள் என இனம்காணப்பட்டுள்ளனர்.

மேலும் 300 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

குவைத்திலிருந்து நாட்டுக்கு வருகைதந்த அனைவரும் பல்வேறு காரணங்களினால் அந்நாட்டில் தடுப்பு நிலையங்கள் அல்லது நாடுகடத்தப்படுவதற்கான முகாம்களில் இருந்தவர்களாகும்.

நோய்த்தொற்றுடையவர்களாக இனம்காணப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதும் முக்கியமானதாகும்.

இந்த பின்புலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் முறைமையை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்