வெளிநாடுகளில் இருந்து வந்த 157 பேருக்கு தொற்று!

கொவிட் 19 சமூக பரவல் தற்போது இல்லை எனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 157 பேர் இதுவரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர்களில் குவைட்டிலிருந்து வருகைதந்த 90 பேரும், டுபாயிலிருந்து வருகைதந்த 18 பேரும் அடங்குவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (25) இனங்காணப்பட்ட 41 பேரில் 40 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஒருவர் டுபாயில் இருந்து வந்தவர் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூகத்தில் இருந்து 405 பேர் வரை மாத்திரமே இதுவரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்