வெல்லவாய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் மூவர் கைது!

வெல்லவாய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கங்காசிறிபுர பிரதேசத்தில் வெல்லவாய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில்  ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேக நபர்களிடமிருந்து 17 கிராம் 270 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 24 வயதிற்கு  இடைப்படரவ்கள் எனவும் அவர்கள் எதிவெல, வெல்லவாய மற்றும் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்