வெற்றியின் விளிம்பில் ஜோ பைடன்

அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. டொனால்ட் டிரம்ப்பும், ஜோ பைடனும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

அமெரிக்க ஜனாதிபதியை தோ்ந்தெடுக்கப்படுவதற்கு, மொத்தமுள்ள 538 தோ்தல் அவை வாக்குகளில் பெரும்பான்மை எண்ணிக்கையான 270 வாக்குகளைப் பெற வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் 264 தோ்தல் அவை வாக்குகளுடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். அதே போல் 214 தோ்தல் அவை வாக்குகளுடன் குடியரசுக் கட்சி வேட்பாளா் டிரம்ப் பின்தங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்