விருது விழாவில் நடிகை ஜோதிகா செய்த விஷயம், வாயடைத்து போன ரசிகர்கள்..!

1999ஆம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளிவந்த வாலி எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.

இதன்பின், பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார். ஆம் சூர்யா, விஜய், கமல், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

இதனை தொடர்ந்து மிக பெரிய இடைவேளைக்கு பிறகு பெண்களுக்கான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.

36 வயதினிலே, மகளீர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா.

சமீபத்தில் கார்த்தி, சத்யராஜ், மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த தம்பி திரைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிரபல விருது விழா ஒன்றில் சிறந்த நடிகை ஜோதிகா என்று இவருக்கு விருது வழங்கப்பட்டது.

அப்போது மேடையில் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தும் விதமாக சிலாபம் சுற்றி காமித்தார் நடிகை ஜோதிகா. இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

முகநூலில் நாம்