விராட் கோலி பற்றி ரசிகர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள் எனத் தெரியவில்லை: மதன் லால்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி மைதானத்தில் ஆக்ரோஷனமாக செயல்படக் கூடியவர். அவரது செயல்பாட்டை இதுவரை நடுவர்கள் கண்டித்தது இல்லை. என்றாலும், ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு ஆக்ரோஷம் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் தலைவராக இருக்கும் மதன்லால் விராட் கோலியின் ஆக்ரோஷம் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதன்லால் கூறுகையில் ‘‘விராட் கோலி ஆக்ரோஷத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் ஏன் கேட்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் ஒவ்வொருவரும் ஆக்ரோஷமான கேப்டன் தேவை என்று விரும்பினார்கள். தற்போது விராட் கோலி அவரது ஆக்ரோஷத்தை குறைக்க வேண்டும் என்கிறார்கள். மைதானத்தில் விராட் கோலியின் செயலை நான் ரசிக்கிறேன்.

முன்னதாக இந்திய வீரர்கள் ஆக்ரோஷமானவர்கள் அல்ல என்று கூறினார்கள். தற்போது வீரர்கள் ஆக்ரோஷமானவர்களாக இருக்கும்போது கேள்வி எழுப்புகிறார்கள். விராட் கோலியின் ஆக்ரோஷத்தை நான் சந்தோசமாக அனுபவிக்கிறேன். நமக்கு அவரை போன்ற கேப்டன் தேவை’’ என்றார்.

முகநூலில் நாம்