வியட்நாம் கடலில் மீட்கப்பட்ட இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடுகள்முன்னெடுப்பு – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையிலான கடற்பரப்பில் மீட்கப்பட்டஇலங்கையர்களின் குடியுரிமை மற்றும் இதர சம்பிரதாயங்களை உறுதிப்படுத்தும் செயன்முறை நிறைவடைந்ததும் அவர்களை விரைவாக நாட்டிற்கு மீளஅனுப்புவதற்காக, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புஆகியவற்றுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் நெருக்கமாகப்பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :பயணிகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் செயன்முறை, வியட்நாம்அதிகாரிகள் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன்ஒருங்கிணைந்து புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பால்மேற்கொள்ளப்படும்.அவர்களது குடியுரிமை மற்றும் இதர சம்பிரதாயங்களை உறுதிப்படுத்தும்செயன்முறை நிறைவடைந்ததும் குறித்த பயணிகளை விரைவாக நாட்டிற்கு மீளஅனுப்புவதற்காக, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ளஇலங்கைத் தூதரகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புஆகியவற்றுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் நெருக்கமாகப்பணியாற்றி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்