வியட்நாமில் இருந்து 151 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள்
நேற்று இரவு விசேட விமானம் மூலம் நாடு திரும்பியதாக பண்டாரநாயக்க சர்வதேச
விமான நிலையத்தின் கடமை முகாமையாளர் தெரிவித்தார்.

அவர்களிடம் தனிப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும்,
மேலதிக விசாரணைகளுக்காக அவை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்
ஒப்படைக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட 303 இலங்கையர்களையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான
முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில் அவர்களில் 151 பேர்
வியட்நாமில் இருந்து இலங்கைக்கு திரும்புவதற்கு உடன்பட்டதையடுத்து நாடு
கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்ச்சிக்கு
எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தமது உயிரை மாய்க்க முயற்சித்த
நிலையில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தமை
குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்