
சட்ட விரோத தங்கக் கடத்தலை முற்றாகக் இல்லாமலாக்குவதை இலக்காகக் கொண்டு
இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஆணையாளரின் அனுமதியின்றி,
விமானப் பயணிகள் 22 கரட்டுக்கும் அதிக தரத்தைக்கொண்ட தங்கத்தை அணிவதை தடை
செய்வதற்கான வர்த்தமானி அடுத்த வாரம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
அநாவசியமாக தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு , அவற்றை விற்பனை செய்வதை
இலக்காகக் கொண்டு , விமானப் பயணிகளைப் போன்று வருகை தருபவர்களுக்கு
எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளரின் அனுமதியின்றி 22
கரட்டுக்கும் அதிக தரத்தைக்கொண்ட தங்கத்தை அணிந்து கொண்டு
விமானப்பயணிகளாக வருகை தருவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.