விமானத்தில் புறப்படுவதற்கு முன் காணமல் போன குழந்தையின் பாஸ்போர்ட்… நீடிக்கும் மர்மம்! தந்தை விளக்கம்

வெளிநாட்டில் இந்திய தம்பதி தங்கள் குழந்தைக்கு வைத்திருந்த பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதால், அவர்களுக்கு இந்திய தூதரகம் உடனடியாக அவசர சான்றிதழை வழங்கி தக்க நேரத்தில் உதவியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு Abu Dhabi சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்படும் விமானத்தில் Aslin Mary Theres தன் 18 மாத மகளான Dervin Cris’-வுடன் புறப்பட தயாராக இருந்த போது, திடீரென்று மகளின் பாஸ்போர்ட் காணாமல் போயுள்ளது.

இதனால் விமானத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பயணிகள் விமானத்தின் உள்ளே தேடியுள்ளனர். இருப்பினும் கிடைக்கவில்லை, இதனால் இது குறித்த தகவல் உடனடியாக இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் உடனடியாக அவசர சான்றிதழ் வழங்கியதன் மூலம் விமானத்தில் பறக்க முடிந்தது.

இந்த சம்பவம் குறித்து Aslin Mary Theres-ன் கணவர் Vinu Anto கூறுகையில், அவர்கள் மூன்று மாத விசா மூலம் வந்திருந்தார்கள். அதன் பின் தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு திரும்புவதற்காக தயாராகினர்.

விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி மகளின் பாஸ்போர்ட்டை பார்த்த போது, அது இல்லை. பாஸ்போர் காணமல் போனதை அறிந்த அவள் உடனே இது குறித்து கூற, விமானத்தில் இருந்த அனைவரும் தேடியுள்ளனர்.

இருப்பினும் அது எங்கே போனது தெரியவில்லை, மர்மமான முறையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் 10.05-க்கு புறப்பட வேண்டிய விமானம், சுமார் 25 நிமிடங்கள் தாமதமானது.

இது குறித்து விமானநிலையத்தில் தெரிவிக்கப்பட்டதால், அதன் பின் நான் தேவையான ஆவணங்களை தூதரகத்தில் சமர்ப்பித்தேன், விமானநிறுவனமும் உத்தியோகப்பூர்வ அஞ்சலை அனுப்பியது.

அதன் பின் தூதரகம் விரைவாக செயல்பட்டு அவசர சான்றிதழை வழங்கியது. இந்த சம்பவத்தினால், நான் எனது குடும்பத்தை இன்னும் ஒரு முறை பார்க்க முடிந்தது. அவர்கள் அதன் பின் பறந்தனர்.

இது என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. ஒரு விமானத்திற்குள் ஒரு பாஸ்போர்ட் எவ்வாறு காணாமல் போனது என்பது ஒருவித மந்திரம் என்றே கூறியுள்ளார்.

முகநூலில் நாம்