விபுலானந்தரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 73வது நினைவு தினம் வவுனியா – கண்டி வீதியில் உள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று (19) காலை இடம்பெற்றது.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில். அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, விபுலானந்தர் தொடர்பான நினைவு பேருரையினை வவுனியா தமிழ்சங்கத்தின் தலைவர் தமிழருவி சிவகுமாரன் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் இசை, அறிவியல், கலை இலக்கியம் என பல்துறைகளிலும் புலமையாளராக விபுலானந்தர் விளங்கியதாக தெரிவித்தார்.

முகநூலில் நாம்