விட்டுக்கொடுத்த ரஜினி, விட்டுக்கொடுக்காத விஜய்..என்ன தீர்வு?

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினி, விஜய். இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அப்படியிருக்க கொரொனா முடிந்து தான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் தாயாருக்கும் படத்தில் தான் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளார், அப்படியிருக்க அண்ணாத்த படத்திற்காக ரஜினி தன் சம்பளத்தை குறைத்துக்கொண்டாராம்.

ஏனெனில் கொரொனாவால் பலரும் கஷ்டப்பட்டு வருவதால், ஆனால், விஜய் இன்னும் தன் சம்பளத்தை குறைக்கவில்லையாம்.

தயாரிப்பு தரப்பில் கேட்டும் விஜய் தன் சம்பளத்தை குறைக்கவில்லை என முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்