விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான ஆயுதங்கள் பெருமளவில் மீட்பு!

திருகோணமலை சூடைக்குடா பிரதேசத்திலுள்ள கடற்படை முகாமிற்கு அருகாமையில் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சம்பூர் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுமார் 110 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அகழ்தெடுக்கப்பட்ட தோட்டாக்கள் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படுபவை எனவும் இவை கடற்கலங்களுக்கு எதிராகவும் பயன்படுத்த முடியும்.

அத்துடன் தோட்டாக்கள் புதைக்கப்பட்ட இடம் யுத்தகாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படை தளமாக இருந்தாகவும், அவர்களே தோட்டாக்களை புதைத்து வைத்திருக்க கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் நீதிமன்ற உத்தரவை பெற்று விசேட அதிரடிப்படையின் உதவியுடன் அழிக்கப்படவுள்ளதாக சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்