
1997ல் நடிகர் விஜய்யின் அப்பா பிரபல தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தாராம்.
‘விஜய்யை ஹீரோவாக வைத்து தான் எடுத்த இரண்டு படங்களும் ஓடவில்லை. இரண்டு வீடுகளை விற்றுவிட்டேன். தற்போது மூன்றாவது முறையாக படம் எடுத்துள்ளேன். அதை விற்கவேண்டும்’ என கூறினாராம் எஸ்ஏ சந்திரசேகர்.
“அதற்கு முன்பு படத்தில் நடிப்பேன் என கூறிய விஜய்யை பெல்டால் அடித்தாராம் சந்திரசேகர். நான் நடித்தே தீருவேன் என வீட்டை விட்டே கிளம்பிவிட்டார். அதற்கு பிறகு ஷோபா சமாதானம் செய்து ஒரே ஒரு படம் மட்டும் தயாரிக்க SACயை ஒப்புக்கொள்ள சமாதானம் செய்தாராம்” இந்த விஷயத்தை SAC வீட்டில் இருந்த எழுத்தாளர் தன்னிடம் கூறியதாக கலைஞானம் கூறியுள்ளார்.
எஸ்ஏசி கேட்டுக்கொண்டதால் அவரது படத்தை பார்த்தோம். அதன்பிறகு ஒரு புதிய படத்தில் விஜய்யை நடிக்கவைக்க தயாரிப்பாளரை நான் தேடிக்கொடுத்தேன், எஸ்ஏசியே இயக்குவதாக முடிவானது. கதை இல்லாததால் நான் தான் ஒரு புது கதையை கொடுத்தேன்.
அதற்கு தற்போது வரை எந்த பணமும் தரவில்லை. அதன்பிறகு விஜய் முன்னணி ஹீரோவாகி சென்னையில் பல வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருந்தார். அப்போது நான் எனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகரை கேட்டேன். அவர் ’எல்லாம் விஜய் மற்றும் அவர் மனைவி தான் பார்த்துக்கொள்கிறார்கள்’ என கூறி மறுத்துவிட்டார்.
தற்போது நான் கேட்காமலேயே ரஜினி வீடு வாங்கி கொடுத்துள்ளார் என கலைஞானம் தெரிவித்துள்ளார்.