
தமிழ் திரையுலக நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.
தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகளில் இவர் ஈடுபட்டுள்ளதாக தேவைகள் வெளியானது. மேலும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரசிகர்களுக்கு விருந்தாக வரும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
தளபதி விஜய் பல படங்களில் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர்த்து பல விஷயங்கள் பேசியுள்ளார் என்பதனை நாம் அறிவோம். குறிப்பாக கத்தி, மெர்சல், சர்க்கார், பிகில் போன்ற படங்களை கூறலாம்.
இதுமட்டுமல்லாமல் அப்படங்களின் இசை வெளியிட்டு விழாக்களில் கூட இவர் சில அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவார்.
மேலும் அண்மையில் நடத்த வருமான வரி துறையினரின் ரைட்க்கு கூட பல தரப்பு மக்கள் சமூக வலைத்தளங்களில், விஜய்க்கு எதிராக எதோ அரசியல் காட்சி செய்யும் விஷயம் தான் என்று கூறினார்கள்.
இந்நிலையில் தற்போது மலையாளத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். இவர் அண்மையில் அளித்த பேட்டியில் “நீங்கள் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு, எளிதளவு கூட யோசிக்காமல் விஜய் அரசியலுக்கு வந்தால் நான் ஆதரிப்பேன்” என்று கூறியுள்ளார்.