விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு சேர அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை கேப்டனாக அவர் வழிநடத்திய விதத்தால் ரசிகர்கள் அவரை தல என்றே அழைக்கின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரரமுான மேத்யூ ஹெய்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி மற்றும் விஜய்யுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. பிரபல நடிகர் விஜய் சந்திரசேகருடன் இருக்கும் இது என்னுடைய விருப்பமான புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்