விஜய்யின் தந்தை வீடு கையகப்படுத்தல்

விஜய்யின் தந்தை வீடு ரூ.76 பணத்துக்காக கையகப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்கிய சட்டப்படி குற்றம் படத்தை விளம்பரம் செய்வதற்காக சரவணன் என்பவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒப்பந்தப்படி விளம்பரத்திற்கான பணத்தை அவர் தரவில்லை எனக் கூறி சரவணன், நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பணத்தை செலுத்த உத்தரவிட்டது. இருப்பினும் பணத்தை செலுத்தாத எஸ்.ஏ.சியின் அலுவலகத்தை கையகப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் அலுவலகமாக இருக்கும் வீடு தான் விஜய் சிறு வயதில் வசித்த வீடு. விஜய் தற்போது கோடிக் கணக்கில் ஊதியம் பெறும்போது தனது தந்தையின் வீடு கையகப்படுத்தப்படுவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்