விக்ரம் திரைப்படம் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிரடியான சண்டைக்காட்சிகளும் சில திருப்புமுனைகளும் நிறைந்த இப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்கிற கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் அசத்தலான நடிப்பும் படத்தின் மதிப்பைக் கூட்டியுள்ளது.

இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் தமிழகத்தில் வெளியான முதல்நாளில் (வெள்ளிக்கிழமை) ரூ.20.61 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அத்தகவல்களில், இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.32 கோடியையும் உலக அளவில் ரூ.48.68 கோடியையும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்தாண்டில் வெளியான தமிழ்ப் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற பீஸ்ட் மற்றும் வலிமை திரைப்படத்திற்கு அடுத்த இடத்தில் ‘விக்ரம்’ இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்