விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு ஆளுநரின் முயற்சிகள் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துகிறது – நீதி அமைச்சர் விஜயதாச யாழில் தெரிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண ஆளுநர்ஜீவன் தியாகராஜா ஆகியோரின் முயற்சிகள் சிறையிலுள்ள தமிழ் அரசியல்கைதிகள் விடுதலையை துரிதப்படுத்துகிறது நீதி அமைச்சர் விஜயதாச ராயபக்ஷதெரிவித்துள்ளார்.30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கைதிகளின்உறவுகளை சந்தித்து கலந்துரையாடிய நிலையில் அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,சிறையில் நீண்ட கலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்விடுதலை தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதியரசர்பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்.வட மாகாண ஆளுநரும் ஜனாதிபதியிடனும் என்னிடமும் தமிழ் அரசிகள் கைதிகளின்விடுதலையை துரிதப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கோரிஇருந்தார்.இவர்கள் இருவரினதும் முயற்சியும் நாட்டின் ஜனாதிபதியினுடைய ஆலோசனையும்குறுகிய காலத்தில் பல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உதவியது.நாட்டினுடைய நீதி அமைச்சர் என்ற வகையில் தமிழ் அரசிகள் கைதிகளின்விடுதலையை விரைவாக மேற்கொள்வதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம்எனத் தெரிவித்தார்.குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பில்இணைப்பாளர் முருகையா கோமகன் நீதி அமைச்சரிடம் கோருகையில் தமிழ அரசியல்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.அந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிப்பதற்கு சிறையில் உள்ள ஏனைய தமிழ் அரசியல்கைதிகளையும் விரைவாக விடுதலை செய்ய உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.குறித்த சந்திப்பில் மட மாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசனும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்