
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடவிருக்கிறாராம். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறாராம்.
குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும்படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.