
பிரித்தானிய விமானப்படையின் வான் சாகச நிகழ்வில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பறவையொன்று மோதியதால், விமானி அறையின் கண்ணாடி உடைந்த சம்பவம் இடம்பெற்றது.

றோயல் விமானப் படையின் உலகப் புகழ்பெற்ற வான் சாகசப் படையின் சாகசக கண்காட்சியொன்று வேல்ஸ் பிராந்தியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன்போது விமானங்கள் சாகமொன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் ரெட் 6 எனும் Hawk T1 ரக விமானத்தில் திடீரென பறவையொன்று மோதியது. இதனால் விமானத்தின் கண்ணாடி உடைந்ததுடன் பறவையும் உயிரிழந்தது.
இச்சம்பவத்தினால் விமானி ஸ்டீவன் ஒக்ஸ்டன் பெரும் அதிர்ச்சியடைந்தார். பறவை மோதியதால் விமான சாகச ஒழுங்கமைப்பிலிருந்து வெளியேறி பாதுகாப்பாக அவர் விமானத்தை தரையிறக்கினார்.
இவ்விமானிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அவரின் நடவடிக்கையை பிரித்தானிய விமானப்படையின் சாகசப் பிரிவு தளபதி டேவிட் மொன்டெனெக்ரோ பாராட்டியுள்ளார்.
தனது அணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அவர் சாந்தமாகவும் சரியாகவும் நடவடிக்கை மேற்கொண்டார் என டேவிட் மொன்டெனெக்ரோ கூறினார்.
இச்சம்பவத்தினால் விமான சாகசக் கண்காட்சி திட்டமிடப்பட்டதைவிட முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
பிரித்தானிய விமானப்படை பேச்சாளர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், ‘எமது விமானத்தில் பறவையொன்று மோதியதால் கண்காட்சி முன்கூட்டியயே நிறுத்தப்பட்டது. இத்தகைய சம்பவங்கள் அசாதாரணமானவை அல்ல.
இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்வற்கு விமானிகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைப் பொருத்தவரை, விமானக் கும் விமானத்துக்கும் மேலும் பாதிப்பு கள் ஏற்படாமலிருப்பதற்கு ரெட் 6 விமானமும் மொத்த அணியும் சிறப் பாக இணைந்து செயற்பட்டன’ எனத் தெரிவித்துள்ளார்.