வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் நடமாடினால் இப்படி தான் இருக்கும், வீடியோவுடன் இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தை xb பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. இப்படத்தில் இருந்து தற்போது வரை 8 பாடல்கள் வெளிவந்துள்ளது.

இதில் தற்போது மிக ட்ரெண்டாக போய் கொண்டு இருக்கும் ஒரு பாடல் என்றால் அது வாத்தி கம்மிங் பாடல் தான்.

இப்பாடலுக்கு கூட இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய், நடிகர் சாந்தனு,இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் நடமாடினார்.

ஆனால் இப்பாடலுக்கு விஜய் முழுமையாக நடமாடியதை நான் தியேட்டரில் தான் பார்க்க முடியும். ஆனால் தற்போது இப்பாடலுக்கு விஜய் முழுமையாக நடமாடி இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று வீடியோ ஒன்று யூடியூபில் வெளிவந்துள்ளது.

முகநூலில் நாம்