வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளுக்காக ஆயத்தமாகி வரும் அரச அச்சக கூட்டுத்தாபனம்

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகளுக்காக அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தை ஆயத்தமாக இருக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

பொதுத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் தீர்ப்பு வெளியானதும், தேர்தல் இடம்பெறும் தினம் அறிவிக்கப்படும். அதன் பின்னர் வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியதன் தேவையை தேர்தல்கள் ஆணைக்குழு அரச அச்சகத் தலைமை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையடுத்து குறித்த நடவடிக்கைகளுக்காக தற்போது அரச அச்சகக் கூட்டுத்தாபனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை மட்டுமே பணிக்கு அமர்த்த வேண்டுமென அரசாங்கம் அறிவித்தமையால், அனைத்து ஊழியர்களையும் தேவைக்கு ஏற்ப பணிக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபன தலைவர் கல்யாணி லியனகே தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்