வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக இன்று (19) அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் 25 வீதம் நிறைவு பெற்றுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று வீடுகளில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பிரதி தபால் மா அதிபர், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, அளிக்கப்பட்டுள்ள தபால் மூல வாக்குகளை தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கும் நடவடிக்கை அடுத்த வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முகவரி அழிந்திருந்த 42,000 கடிதங்கள் மற்றும் பொதிகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய தபால் பரிமாற்றகத்தின் அதிகாரி அஸ்லாம் ஹசன் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்