வாக்களிப்பது எப்படி? இதோ விபரங்கள்

ஸ்ரீலங்காவில் இடம்பெறவுள்ள (05) பொதுத் தேர்தலில் கிரமமாகவும், நேரத்தியாகவும் வாக்களிப்பது எவ்வாறு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெளிவுபடுத்தியுள்ளார்.

அதன்படி நீங்கள் விரும்பும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்திற்கு முன்பாக புள்ளடியிடுங்கள். வேறு குறியீடுகளை இடுவதை தவிருங்கள்.

ஒன்றை விட அதிக புள்ளடிகள் இருந்தால் உங்கள் வாக்கு நிராகரிக்கப்படும்.

விருப்பு இலக்கங்களுக்கு வாக்களிக்க விரும்பினால்,அந்த இலக்கம் மீது புள்ளடியிடுங்கள்.

நீங்கள் இன்னுமொரு வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பினால் அந்த இலக்கத்தின் மீது புள்ளடியிடுங்கள்.

ஆகக் கூடுதலாக மூவருக்கே உங்களால் விருப்பு வாக்கை அளிக்க முடியும்.

ஒருபோதும் உங்கள் விருப்பு வாக்குகளை மூவரை விட அதிகமானவர்களுக்கு அளிக்க வேண்டாம்.

விருப்பு வாக்குகளை அளிக்காவிட்டாலும் உங்கள் வாக்கு நிராகரிக்கப்பட மாட்டாது. எனினும், கட்சிக்கு அல்லது சுயேட்சைக்குழுவிற்கு வாக்களிக்காமல் விருப்பு வாக்குகளை மாத்திரம் அளித்தால் உங்கள் வாக்கு நிராகரிக்கப்படும்.

முதலில் வாக்கையும் இரண்டாவதாக விருப்பு வாக்கையும் அளிக்க வேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்