வாகன இறக்குமதி தடை நீ​டித்தால் பலர் தொழில் இழப்பர்!

வாகன இறக்குமதி நீடித்தால் தமது வர்த்தக நடவடிக்கைகளை மூடிவிட்டு, பணியாளர்களை சேவைகளிலிருந்து நீக்க நேரிடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் அரோஸ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

விற்பனை முகாமையாளர்கள், சாரதிகள், உதவியாளர்கள் பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப பணியாளர்கள், கணக்காளர்கள் என அதிகமானோர் ​தொழில் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே, இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணியைப் பாதுகாக்க வாகன இறக்குமதியை அரசாங்கம் நிறுத்த தீர்மானித்தாலும் அது வாகன இறக்குமதியாளர்களைப் போன்று நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி​யுள்ளார்.

முகநூலில் நாம்