வாகனத்தில் கட்டி இழுத்துக் இளைஞர் கொலை

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இளைஞர் ஒருவர் மிகக் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு, வாகனத்தோடு கட்டி இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட காணொளி நேற்றே பரவத் தொடங்கி இருக்கிறது.

இது தொடர்பாக எட்டு பேர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்களில் இரண்டு முக்கிய நபர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள்.


கண்ஹையா லால் பில் என்ற குறித்த பழங்குடி இளைஞர் சென்று கொண்டிருந் இருசக்கர வண்டி குஜ்ஜர் சாதியைச் சேர்ந்த ஒருவர் மீது மோதியுள்ளது.

அதனால் அவரைப் பிடித்து அடித்து துன்புறுத்தினர். பிறகு வாகனத்தின் பின் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் ஏற்பட்ட பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த போது, ஒருவர் மொத்த நிகழ்வையும் காணொளியாக படம் எடுத்துக் கொண்டிருந்தார்’ என பொலிசார் கூறுகின்றனர்.

எட்டு பேர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்