வவுனியா வைத்தியசாலையிலிருந்து யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நபர்!

கொரனா வைரஸ் தனக்கு உள்ளதா என வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.

இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியாவை சேர்ந்த பிரஜையொருவர் நேற்று இரவு தான் சீன பிரஜை ஒருவரை அண்மையில் சந்தித்தமையால் தனக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வந்திருந்த தாகவும் அவரை மேலதிக பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது.

முகநூலில் நாம்