வவுனியா மற்றும் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவைகள் மீள ஆரம்பம்

வவுனியா – கொழும்புக்கு இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட்- 19 தாக்கத்தையடுத்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வவுனியாவிற்கும்,கொழும்புக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நாடு புதிய கட்டுப்பாடுகளுடன் இயல்புக்கு திரும்பியுள்ள நிலையில் போக்குவரத்து பயணிகளின் நன்மை கருதி வவுனியா – கொழும்புக்கு இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சொகுசு பேருந்தில் பயணிப்பவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், குறித்த குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை வவுனியாவிலிருந்து தினமும் பிற்பகல் 2.30 மணிக்கும், இரவு 11.30 மணிக்கும் கொழும்பு நோக்கியும்,கொழும்பில் இருந்து தினமும் காலை 11 மணிக்கும், இரவு 9.30 மணிக்கும், வவுனியா நோக்கியும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்