வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

நாடு முழுவதும் இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கலாம் எனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்