வலிமை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளிவந்த லேட்டஸ்ட் வீடியோ, இதோ

தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தில் அஜித்துடன் பாலிவுட் கதாநாயகி ஹூமா குரேஷி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

மேலும் இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லங்கள் என்றும் அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா என்பவரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் கசிந்தது.

ஆனால், இதுவரை இந்த விஷயங்களை குறித்து தயாரிப்பாளர் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் வரை முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மீதம் உள்ள காட்சிகளும் மிக விரைவில் எடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்திருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிதாக வீடியோ ஒன்று கசிந்துள்ளது.

முகநூலில் நாம்