வலிமை படத்தின் செம மாஸ் அப்டேட், அஜித்துக்கு நிகரான சண்டை காட்சியில் இவரா?

தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வெளிவந்த மிக பெரிய வெற்றியடைந்த படம் நேர்கொண்ட பார்வை.

இப்படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்த படம் தான் வலிமை.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 65% சதவிதம் வரை முடிந்துள்ளது என்று சமீபத்தில் சில தகவல்கள் கசிந்திருந்தது.

இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா என்பவரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்திருந்தது.

மேலும் இப்படத்தில் ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி மிக முக்கியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று உறுதியான தகவலே வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு நிகரான சண்டை காட்சிகளில் நடிகை ஹூமா குரேஷி அவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

முகநூலில் நாம்