வலிகாமத்தில் காணிகளை முழுமையாகச் சுவீகரிக்க உத்தரவு

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை முழுமையாகச் சுவீகரித்துப் படையினரின் தேவைகளுக்குப் பயன்படுத்துமாறு தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள காணி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ரேனுகா, தெல்லிப்பளைப் பிரதேசச் செயலாளருக்குச் சிங்கள மொழியில் அனுப்பியுள்ள கடித்ததில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வலிகாமம் வடக்குப் பகுதியில் தற்போது வரை இரண்டாயிரத்து 467 ஏக்கர் நிலம் படையினர் வசமுள்ளது. இதில் இராணுவத்துக்கு ஆயிரத்து 614 ஏக்கரையும் அளவீடு செய்யுமாறு தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்