
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பாக இலங்கைதொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில்தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பாக மலையகமக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல என இ.தொ.காவால்ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும் மலையக மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், அபிவிருத்திதிட்டங்களுக்காக நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இ.தொ.காமுன்வைத்தது.அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அபிவிருத்தி திட்டங்களை அதிகரிப்பதுசம்பந்தமாக எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி செயலகத்தில் இ.தொ.காவுடன்விசேட கூட்டம் நடத்தப்பட்டு தேவையான அளவு நிதி அதிகரிப்பதாக ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.