
நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதுதொடர்பில் இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி தமது திட்டத்தைதெரிவித்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏசுமந்திரன் தெரிவித்தார்.ஜனாதிபதியினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற கட்டிடத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும்தெரிவித்த அவர்,இந்த வரவு செலவுத் திட்டத்தில் புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவும்கிடையாது. கூட்ட வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே கூட்டியுள்ள நிலையில்தற்போது இந்த வரவு செலவுத் திட்டத்தில் முக்கியமானது என எதையும்குறிப்பிட முடியாது. நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய நெருக்கடியை எவ்வாறுதீர்க்கலாம் என்பதற்கான ஜனாதிபதியின் திட்டமாக மட்டுமே இது அமைந்துள்ளதுஎன்றும் அவர் மேலும் தெரிவித்தார்.